தூய்மை பணியில் உள்ள ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் - திருப்பூரில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் கோரிக்கை

தமிழக அரசு உடனடியாக தூய்மை பணியில் உள்ள ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்றும் மாநில அளவில் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பூர்: தமிழக அரசு உடனடியாக தூய்மை பணியில் உள்ள ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்றும் மாநில அளவில் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாகத் தமிழகம் வந்துள்ள தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் இரண்டாவது நாளாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.



இந்த கூட்டத்தில் அதிகாரிகளுடன் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கி பணியாளர்களிடம் குறைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், தூய்மை பணியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நியாயமாகச் சென்று சேர வேண்டிய சம்பளம் சேர்வதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. அவற்றையெல்லாம் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முறைகேடுகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டு, அறிக்கை வந்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர், தமிழக அரசுக்கு மூன்று கோரிக்கைகளையும் கூறினார்.

அதன்படி, தூய்மை பணியில் தமிழக அரசு ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பாதிப்பை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், மாநில அளவில் தூய்மை பணியாளர்களுக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்றவர். தூய்மை பணியாளர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாம் இருப்பதால், வருடத்தில் 4 முகாம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தூய்மை பணியில் ஈடுபடும் வடமாநில ஆட்களிடம் தினம் 100 ரூபாய் பிடித்தம் செய்வதாகக் குற்றச்சாட்டு உள்ளது.



அதுகுறித்து ஆய்வு செய்து உரியப் பணம் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், கொரோனா தொற்றால் உயிரிழந்த முன் களப் பணியாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...