கோவையில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி உட்பட 3 பேர் பலி..!

புகாரின் பேரில் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மதுகுமார் (19). இவர் கோவை சூலூரை அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவருடைய நண்பர் பரமோத்குமார் மற்றும் பரத்துடன் பாப்பம்பட்டி பகுதியில் இருந்து இடையர்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பரமோத்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய நண்பர் பரத் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கோவை கீரணத்தம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் கார்த்திக் (30). கூலித் தொழிலாளியான இவர் சரவணம்பட்டியில் இருந்து கீரணத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள மயானம் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கோவை பீளமேடு லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் (49). இவர் நேற்று தனது தாய் ரங்காத்தாளுடன் சிங்காநல்லூர் அருகே காமராஜர் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவரது தாய்க்கு தலையில் பலத்த காயம் அடைந்தது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, அவரது மகன் ஜெயபால் அளித்த புகாரின் பேரில் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...