தள்ளிப்போகும் நீட் கலந்தாய்வு - கோவையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.


கோவை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.



சென்னை, மதுரை உள்ளிட்ட மருத்துவ மனைகளில் மருத்துவர்களாக பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தற்போது கலந்தாய்வை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவர்கள் கூறியதாவது:-

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடைபெற்றது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதனால், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றும், நீட் தேர்வு எழுதிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனர்.

கலந்தாய்வு நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் 2,500-போ் உட்பட இந்தியா முழுவதும் 40- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முதுநிலை படிப்புகளில் சேர்ந்திருப்பார்கள் என்றும், முதுநிலை படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவார்கள்.



ஆகவே, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் வராததால், ஏற்கெனவே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பணிச் சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளது. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...