புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை: கோவை சாய்பாபா காலனியில் செல்போன்களை விற்று 2 லட்சம் ரூபாய் கையாடல் செய்த மேனேஜர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலை பகுதியில் ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான ஷோரூம் உள்ளது. இந்த கிளையின் மேனேஜராக கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் பணிபுரிந்து வந்தார்.
அதேபோல, கோவையில் உள்ள ஷோரூம்களுக்கு ஏரியா மேனேஜராக கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த ஜவகர் (39) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஆண்டு நிறுவனத்தில் இருந்த செல்போன்கள் விற்பனை குறித்த வரவு செலவுகளை ஏரியா மேனேஜர் ஜவகர் சரிபார்த்த போது, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஷோரூமில் பத்து செல்போன்கள் விற்பனை செய்தது குறித்து தொகை கணக்கில் வரவு செய்யப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஜவகர் விசாரணை நடத்திய போது, சாய்பாபா கிளை மேலாளர் ராஜா பத்து செல்போன்களை மோசடியாக விற்று பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து செல்போன்களை கையாடல் செய்து, விற்று பணத்தை கையாடல் செய்ததாக, ஜவகர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.