வால்பாறையில் அறுவடைக்கு தயாரான காபி பழம் பறிக்கும் பணி தீவிரம்..!

வால்பாறையில் காப்பி பழங்கள் அறுவடை தொடங்கியது. ஒரு செடியில் அதிக பட்சமாக ஒரு கிலோ முதல் 2-கிலோ பழங்கள் கிடைக்கும். மார்ச் மாதம் வரை காபி பழங்கள் பறிக்கும் பணி நீடிக்கும்.


கோவை: வால்பாறையில் காப்பி பழங்கள் அறுவடை தொடங்கியது.

பொதுவாக மலைப் பிரதேசமான வால்பாறை பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு, ஏலக்காய், ஆகிய பணப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிக அளவில் தேயிலையும், குறைந்த அளவில் காப்பியும் பயிரிடப்பட்டு இருக்கிறது.

வால்பாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 2677-ஏக்கர் பரப்பளவில் காபி சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. வால்பாறை பகுதியில் இரண்டு வகை காபி உற்பத்தி செய்யப்படுகிறது. ரோபாஸ்ட்ரா, பெரி பெரி, என்று உள்ளது.



காபி செடிகள் ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரை காபி சாகுபடி இருக்கும். மே மாதம் முதல் செடியில் பூக்கள் பூக்கத் தொடங்கித் தொடர்ந்து பூக்களிலிருந்து காய்கள் பிடித்துச் சிவப்பு நிறமாக வரும் பழங்கள் தற்போது பழுத்து அறுவடைக்குத் தயார் ஆனது.



இந்த காபிச் செடிகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்ய முடியும். காபி செடிகள் பராமரிப்பது அதிக வேலை செய்ய வேண்டும் இதனால் பலர் ஆண்டு முழுவதும் மகசூல் கொடுக்கும் தேயிலை பயிருக்கு மாறிவிட்டனர்.



தற்போது காபி பழங்களை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு செடியில் அதிக பட்சமாக ஒரு கிலோ முதல் 2-கிலோ பழங்கள் கிடைக்கும். இந்தப் பழங்களைக் காய வைத்து அதிலிருந்து காபி கொட்டைகளை எடுத்து அவற்றை காபித்தூள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் இந்த காப்பி பழங்கள். இந்நிலையில் தொடங்கி மார்ச் மாதம் வரை காபி பழங்கள் பறிக்கும் பணி நீடிக்கும்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...