கோவையில் போலி செக் மூலம் ரூ.10 லட்சம் பணம் மோசடி..!

போலி செக் தயாரித்து 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மேத்தா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் போலி செக் தயாரித்து 10 லட்சம் பணம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியில் மில் நடத்தி வருபவர் கல்யாணசுந்தரம் (55). இவர் கோவை கணபதி பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நடப்பு கணக்கு வைத்துள்ளார்.

இவர்களது நிறுவனத்தின் மூலம் பண வரவு செலவுகள் அனைத்தும் ஆன்லைன் மற்றும் செக் மூலம் நடத்தப்படுவது வழக்கம். மேலும், அதிக அளவிலான தொகை குறித்த வரவு செலவுகள் வங்கி மூலம் மில் அலுவலக செல்போன் எண்ணுக்கு அழைத்து உறுதி செய்தபின் பரிவர்த்தனை செய்வது வழக்கமான ஒன்று.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்யாண சுந்தரத்தின் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து பத்து லட்ச ரூபாய் டெல்லியிலுள்ள சுரேஷ்குமார் மேத்தா என்பவரின் கனரா பேங்க் வங்கி கிளைக்கு மாற்றப்பட்டதாக மெசேஜ் வந்தது.

இதனையடுத்து, கல்யாணசுந்தரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணபதி கிளை மேனேஜரிடம் இது குறித்து கேட்டார். அப்போது வங்கி மேனேஜர் நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டதாக உள்ள செக் மூலம் பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

அந்த செக்கை சோதித்துப் பார்த்த பொழுது அது போலியாக தயாரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கல்யாணசுந்தரம் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், போலீசார் போலி செக் தயாரித்து 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மேத்தா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...