தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பாக தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை..!

இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதின் அவசியம் குறித்து முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பாக தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் மவ்லானா பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம்.

சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலித்து இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளையும், விடுதலை செய்வதின் அவசியத்தை மிகவும் வலியுறுத்திக் கூறினோம்.

இந்த ஆட்சியில் விடுதலை இல்லையெனில் வேறு எப்போதும் விடுதலை கிடைக்காது என்ற மனநிலையில் மக்கள் இருப்பதை எடுத்துரைத்தோம்.

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் முக்கிய அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். நமது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக முதலைமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...