பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளி கைது..!

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆனைமலை போலீசார், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூரை சேர்ந்தவர் சின்னச்சாமி (40) கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவர் நேற்று குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க திருமணமாகிய பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சின்னசாமியை கைது செய்த ஆனைமலை போலீசார், வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...