ஆனைமலை அருகே இரவு பெய்த கனமழையால் வீடுகளின் சுவர் இடிந்து விபத்து - மின் கம்பம் சாய்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

அதேபோல, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


கோவை: ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் இரவு பெய்த கனமழையால் வீடுகளின் சுவர் இடிந்து மின் கம்பம் சாய்ந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அங்கலக்குறிச்சி இந்திரா நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கழிவு நீர் செல்லும் வழித்தடங்கள் மண் சரிந்து அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் நீர் தேங்கியது.

மேலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மழைநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தது. மேலும் மின்கம்பம் சாய்ந்து வீட்டின் மதில் சுவர் மேல் விழுந்தது.

இதையடுத்து, உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு தஞ்சமடைந்தனர். தற்போது வீட்டுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற முயன்று வருகின்றனர்.

அதேபோல, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சரி செய்யும் பணியிலும், ஊராட்சி ஊழியர்கள் கழிவுநீர் வழித்தடத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...