மேட்டுப்பாளையம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு பறிமுதல் - இருவர் கைது..!

சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கி வைத்திருந்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதிகளில் மான், காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், மான் மற்றும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட சிலர் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி மற்றும் நாட்டுவெடிகளை பயன்படுத்துவதாக கோவை SP செல்வநாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் கரட்டுமேடு கருப்பராயன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த செல்வம் (41) என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்வம் மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது.

பின்னர், கரட்டுமேடு பகுதியில் உள்ள செல்வம் (41) மற்றும் அவரது நண்பர் மனோகரன் (40) உள்ளிட்டோரின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டான 4 அவுட்டுக்காய்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத்துப்பாகி, 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடி மருந்து பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.



பின்னர், இருவர் மீதும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையம் பகுதியில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...