கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை சரவணா செல்வரத்தினம் வர்த்தக நிறுவனத்தில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களிலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நகைக்கடை, துணிக்கடை, ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் செல்வ ரத்தினம் மற்றும் ராஜரத்தினத்திற்கு சொந்தமான சூப்பர் சரவணா ஸ்டோர், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் சரவணா செல்வரத்தினம் ஜவுளி கடையிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் கடையில் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்த நிலையில், கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து, ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சுமார் 434 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.