மனநலம் பாதிகப்பட்ட பெண்ணின் கை, கால்களை கட்டி வைத்த தாய்- காப்பகம் வேண்டி கண்ணீர்


கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா (26). திருமணமான இவரின் குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது கணவர் பியூலாவை விட்டுச் சென்றுள்ளார்.



இதனால் மனவேதனையில் காணப்பட்ட பியூலா  கடந்த இரு மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அவரது தாய் தனலட்சுமியின் அரவணைப்பில் இருந்துள்ளார். இதனிடையே, அப்பகுதியினரை கற்களைக் கொண்டு அடிப்பதும், சாலையில் திரிவதுமாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் தலையில் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார்.



இதைத்தொடர்ந்து, அவரது தாய் பியூலாவை வீட்டினுள் சிறைவத்துள்ளார். தற்போது அப்பெண்ணை வீட்டின் அருகே உள்ள கோவிலில் கை, கால்களை கட்டி அமரவைத்துள்ளார்.

இதுகுறித்து, தனலட்சுமி கூறுகையில், என் மகளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் மாத்திரை, மருந்துகளை மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பி வைத்தனர். நான் அங்கேயே உள்நோயாளியாக அனுமதிக்கக் கோரிய போது அவர்கள் மறுத்து விட்டனர். நான் காலில் விழுந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் கேட்கின்றனர். அந்தளவிற்கு பணம் எங்களிடம் இல்லை. அரசு நிர்வாகம் எங்களுக்கு உதவி செய்து என் மகளை குணமடையச் செய்ய வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் வியூலாவின் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அகற்றினர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...