சாய ஆலைகளில் கழிவு நீர் தொட்டிகளை சரிவர ஆய்வு செய்ய தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் - திருப்பூரில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களை பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீதும், அதனை கவனிக்கத் தவறும் அதிகாரிகள் மீதும் வரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வெங்கடேசன், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர்.



கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களை பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீதும், அதனை கவனிக்கத் தவறும் அதிகாரிகள் மீதும் வரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வெங்கடேசன், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர்.

திருப்பூர்: சாய ஆலைகளில் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வற்கு மனிதர்களை பயன்படுத்தாமல் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், இதனை மீறும் சாய ஆலை உரிமையார்கள் மீதும், அதனை ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் எச்சரிக்கை.

திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் கொத்துக்காடு தோட்டத்தில் ‘பேன்டோன் டையர்ஸ்’ என்ற சாய ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 14-ம் தேதி, சாய ஆலையில் உள்ள, இரண்டு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய, திருப்பூர் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த, ஆறு பேர் சென்றனர்.

அப்போது, சுத்தம் செய்ய சென்ற வடிவேல் (32) மற்றும் அவரை காப்பாற்ற சென்ற, நிறுவனத்தில் வேலை செய்யும் மேலாளர் தினேஷ்பாண்டி (32) மற்றும் சாய ஆலையின் பிட்டராக பணியாற்றி வந்த ராஜேந்திரன்( 55) ஆகியோர் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொட்டியை சுத்தம் செய்ய வைத்தது தொடர்பாக, சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமி (48) என்பவர் மீது, ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து, வீரபாண்டி போலீஸார் அவரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ஆய்வு செய்து, சாய ஆலைக்கு நோட்டீஸ் வழங்கினார்.

இந்த நிலையில், விஷவாயு தாக்கி, 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து, விசாரணை நடத்த டெல்லியில் இருந்து தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் இன்று திருப்பூர் வந்தார்.



பின்னர் சம்பவம் நடந்த சாய ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, மேலும் அரசு உதவிகள் கிடைக்கப் பெற்றது என்பது குறித்து கேட்டறிந்தார்.மேலும், அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 3 நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ளேன். இன்று சாய ஆலை கழிவுநீர் தொட்டில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த ஆலையில் ஆய்வு செய்துள்ளேன். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டேன்.

இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் SCST சட்டப்படி அவர்கள் குடும்பத்திற்கு 8.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். முதற்கட்டமாக, அவர்களின் வங்கி கணக்கிற்கு 4 லட்சம் போடப்பட்டுள்ளது. மேலும், MS சட்டப்படி 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன். விரைவில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். மேலும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சாய ஆலைகள் அதிகம் காணப்படுகிறது. எனவே, கழிவுநீர் தொட்டிகளில் இறங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சாய ஆலை உரிமையாளர்கள், மனிதர்களைப் பயன்படுத்தாமல் இயந்திரங்களைக் கொண்டு கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் முறையாக ஆய்வுகள் மேற்கொண்டால், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும். ஆனால், அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் அலட்சியம் காட்டுகின்றனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களை பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீதும், அதனை கவனிக்கத் தவறும் அதிகாரிகள் மீதும் வரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...