திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாற்றில் உபரிநீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!

24-ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.


திருப்பூர்: 24-ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை அமைந்துள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட (பிஏபி) தொகுப்பு அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுவதுடன், உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றிய பகுதியிலுள்ள கிராமங்களுக்குக் குடிநீர் திட்டங்களுக்கும் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில் 58.00 அடியாக உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,145 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பிஏபி 4 ம் மண்டலத்திற்குப் பிரதான கால்வாய், உடுமலை கால்வாய், குடிநீர் என வினாடிக்கு 1010 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் திருமூர்த்திமலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அணை நிரம்பியதையடுத்து பாலாற்றில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறக்கப்பட்டு பாலாற்றின் வழியோர கிராமங்களுக்கும், கேரளா மாநிலம் சித்தூர், ஒலவங்கோடு உள்ளிட்ட வழியோர மக்களுக்கும் பொதுப்பணித்துறை சார்பில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணை கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 5 ம் தேதி நிரம்பியது. அதன் பிறகு 24 ஆண்டுகளாக நிரம்பவில்லை. கடந்த 5, 26, 28ம் தேதிகளில் நிரம்பிய நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் நீர்வரத்து குறைந்ததாதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...