'ஒமிக்ரான்' எதிரொலி: கேரள மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரம்..!

உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் தமிழக போலீஸாா் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


கோவை: உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் தமிழக போலீஸாா் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனாவின் வீரியமிக்க புதிய வைரஸான ஒமிக்ரான் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சாலக்குடி சாலை வழியாக வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் எல்லைப்பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இரு மாநில போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலமாக இரு மாநிலங்களுக்கு இடையே செல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கேரளத்திலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை வந்து செல்கின்றனர்.

இருப்பினும் போலீஸாா் கேரளத்திலிருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்துள்ளனரா என்ற விசாரணைக்குப் பின்னரே வால்பாறைக்குச் செல்ல தமிழக போலீஸாா் அனுமதித்து வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...