சின்னியம்பாளையம் பகுதியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரியும் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 45,000 திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சின்னியம்பாளையம் மதுரை வீரன் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவரின் மனைவி காமாட்சி (52). இவர் இருகூர் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது சம்பளம் அவரது இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காமாட்சி தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக இருகூர் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்க்கு சென்றார்.
அப்போது, வங்கி ஏடிஎம் அறையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் காமாட்சிக்கு பணம் எடுப்பதற்கு உதவி செய்தார். பின்னர், தனது வீட்டிற்கு காமாட்சி திரும்பி வந்துவிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக காமாட்சிக்கு மெசேஜ் வந்தது.
இதையடுத்து, அவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு சென்று மேனேஜரிடம் விளக்கம் கேட்டார். அப்போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஏ.டி.எம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும், தனது ஏடிஎம் கார்டு தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த ஏடிஎம் கார்டை வாங்கிப் பார்த்த மேனேஜர் இது உங்களது ஏடிஎம் கார்டு இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, பணம் எடுத்துக் கொடுப்பது போல நடித்த மர்ம நபர் போலியான ஏடிஎம் கார்டை கொடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, காமாட்சி சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.