அதேசமயம், இரு மாநிலங்களுக்கு இடையே தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: தமிழக - கேரள பகுதிகளுக்கு பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கிய நிலையில், பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் இரு மாநிலங்களில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள், பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பொது போக்குவரத்து சேவை தொடங்க தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, இன்று முதல் பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி உள்ளிட்ட எட்டு வழி தடங்களில் போக்குவரத்து சேவை தொடங்கியது.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக - கேரள பகுதிகளுக்கு பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கியதால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள எல்லை வரை பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், நகர்ப்புறங்களுக்குச் செல்ல சிரமப்பட்டு வந்ததாகவும், தற்போது பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.