மாவட்டம் முழுவதும் 6,363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக தற்போது வரை 1,235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேளாண் துறை விவசாயிகளுக்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், எரிசக்தி துறையின், 2021-22ம் ஆண்டு மானிய கோரிக்கையில், மாநிலத்தின் விவசாய உற்பத்தியைப் பெருக்கி, விவசாய நலனை மேம்படுத்தும் நோக்கில் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றின் சார்பில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டம் முழுவதும் 6,363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் கோவையில் தற்போது வரை, 1,235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. விரைவில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு, இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.