சராசரி மனிதர்கள் இடையே பெண்குழந்தைகள் பற்றிய புரிதல் மாற துவங்கியுள்ளது. பிரதமரின் Beti Bachao, Beti Padhao திட்டம் மூலம் ஹரியானா போன்ற மாநிலத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கோவை: இந்தியாவில் பெண் பாலின விகிதம் அதிகரித்துள்ளது என குடும்பம் மற்றும் சுகாதாரத்துறை அறிக்கை கடந்த வராம் வெளியிட்டுள்ள நிலையில் இன்று பா.ஜ.கவின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை தனியார் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பேசினார்.
அவர் பேசியதாவது:
முதல்முறையாக இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் என்று பெண்பாலின விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த அறிக்கையில் 991 என இருந்த நிலையில், தற்போது 1020 என்று அதிகரித்துள்ளதை ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். குறிப்பாக, பெண் குழந்தைகள் குறித்தான மனநிலை இன்று சமூகத்தில் மாறியுள்ளதை இந்த அறிக்கை நிரூபிக்கிறது.
பிரதமரின் "பேட்டி பச்சாவ் பேட்டி பத்தாவ்" திட்டம்.
சராசரி மனிதர்கள் இடையே பெண்குழந்தைகள் பற்றிய புரிதல் மாற துவங்கியுள்ளது, மேலும், பெரிதும் பெண்குழந்தைகள் பற்றிய புரிதல் இல்லாத ஹரியானா மாநிலத்தில், பெண் குழந்தைகளுக்கான “பேட்டி பச்சாவ் பேட்டி பத்தாவ்” (Beti Bachao, Beti Padhao) திட்டத்தை, பிரதமர் துவங்கிவைத்தார். அத்திட்டம் மட்டுமின்றி அரசியலில் எடுக்கப்படும் முடிவுகளில், பெண்களுக்கு என்று கொடுக்கப்பட்ட முக்கியத்துவமானது, பெண்கள் பற்றிய புரிதலை மாறச் செய்துள்ளது.
பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பயன்பாடு அதிகரிப்பு.
பொது சுகாதார வசதிகள் 48.5 இல் இருந்து 70 சதவிதமாக உயர்ந்துள்ளது. எரிவாயு உபயோகப்படுத்தும் பெண்கள் 43 சதவீதத்தில் இருந்து 58.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாதவிடாய் காலங்களில் சானிடரி நாப்கின் பயன்பாடு 57.6 சதவீதத்தில் இருந்து 77.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கி கணக்கு பயன்படுத்தும் பெண்களின் சதவீதமும் 53% - 78.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் 28.2 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த மாற்றத்தை வரவேற்கிறோம்.
தெற்கு தொகுதியில் சாலை மேம்பாடு.
கோவை தெற்கு சட்டமன்ற பகுதியில், சாலைகள் தொடர்ந்து பராமரிப்பு இன்றி இருக்கும் நிலையில், சாலைகளை சீரமைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருகின்றது. கோவை விமான நிலை விரிவாக்கம் மற்றும் கோவை சிறைச்சாலை இடம் மாற்றம் குறித்து கோவை வந்த தமிழக முதல்வரிடம் நாங்கள் கேட்டுக்கொண்ட நிலையில், ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் கூறுகின்றனர். கோவையின் தேவைகளுக்கு, பிரச்சனைகளுக்கு ஏற்ப இந்த அரசாங்கம் செயல்படவில்லை.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இதன் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். பெண்கள் மீதான பாலியல் விசாரணை முடிவு அறிக்கை, பெண்களுக்கு எதிராக அறிக்கை வெளியாகும் பொழுது அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டரீதியாக வாய்ப்புண்டு.
தேர்தலில் இடஒதுக்கீடு குறித்து பா.ஜ.க தலைமை, கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கும். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.