கோவையில் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க நிர்வாகி மீது வழக்கு பதிவு..!

புகாரின் பேரில் வி.சி.க., நிர்வாகி ஜார்ஜ் குப்புசாமி மற்றும் அவரது மனைவி மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பெண் கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த, வி.சி.க., நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜன் (44). இவர், தபால் துறையில் போஸ்ட்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் குப்புசாமிக்கும், நீண்ட நாட்களாக, வழித்தட பிரச்சினை இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜார்ஜ் குப்புசாமி மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர், அற்புதராஜனிடம், அடிக்கடி தகராறு செய்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, அற்புதராஜன் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து அறிவுரை வழங்கினர்.

இதனையடுத்து, தன்னையும் தன் மனைவியையும் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அற்புதராஜன் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஜார்ஜ் குப்புசாமி மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பெண் கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...