காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே 40க்கு மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலைத் தோட்ட பகுதிகளில் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கேரளா வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தமிழகத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள், சத்துணவு மையங்கள் போன்றவற்றை உணவு தேடி இடித்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதியான வாகமலை சங்கிலி ரோடு, பண்ணிமேடு போன்ற பகுதி எஸ்டேட் பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறி தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரிந்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றது.

இந்த நிலையில், இன்று காலை தொழிலாளிகள் தேயிலை பறிக்கும் பணிக்காக தேயிலைத் தோட்டத்திற்கு சென்ற போது, யானைகளை கண்டு அச்சமடைந்து வேறு இடத்திற்கு தேயிலை பறிக்கும் பணிக்காக அனுப்பப்பட்டனர். இதனால் சிறிது நேரம் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.

இதனிடையே, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.