கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர் ஒப்பந்த சம்பளம் வழக்கு விசாரணை 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக 16 ஆயிரத்து 725 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.


கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.16 ஆயிரத்து, 725 வழங்கும் அரசாணையை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில், தினக்கூலி அடிப்படையில், 3,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான தினக்கூலியை, ஆண்டுக்கு ஒருமுறை, அப்போதைய விலைவாசியை கணக்கிட்டு, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்து அறிவிக்கிறார்.

அதன்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலியாக, 475 ரூபாய் நிர்ணயித்திருந்தாலும், மாநகராட்சியில் வேலைபார்ப்போருக்கு, இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் போக, மாதம் ரூ.9,000 - 10,000 வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக, 16 ஆயிரத்து, 725 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தாமல், மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டது. தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர், தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், இணை ஆணையர் சிவகாமி இல்லாத காரணத்தால், நிர்வாக காரணங்களை கூறி, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...