கோவை சுகுணாபுரம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கண்காணிக்க கேமரா பொருத்தம்..!

மக்கள் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மதுக்கரை வனச்சரகர் தெரிவித்தார்.


கோவை: கோவை சுகுணாபுரம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த இரு நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று தன்னாசியப்பன் கோவில் கேட்டிலும், உள்பகுதியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இது குறித்து மதுக்கரை வனச்சரகர் சந்தியா கூறுகையில், "சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதுவரை ஆட்கள், கால்நடைகள், வளர்ப்பு நாய்களை தாக்கியதாக தகவல் இல்லை. அதன் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்த பின், மாவட்ட வன அலுவலரின் அனுமதி பெற்று கூண்டு வைக்கப்படும். அதேசமயம், மக்கள் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...