கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் முடிகாணிக்கை செலுத்த தனி மண்டபம்..!

முடி காணிக்கை செலுத்தும் மண்டபம், 10 குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.72 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்து, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில், முடி காணிக்கை மண்டபம் கட்ட, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை வடவள்ளி அருகே உள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோவில் படிக்கட்டு பாதையில், முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளது. இவ்விடம் குறுகலாக இருப்பதால், விசேஷ நாட்களில் பக்தர்கள் நிற்க இடமில்லாமல், படிக்கட்டில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்குச் சொந்தமான 93 சென்ட் இடத்தில், முடிகாணிக்கை மண்டபம் கட்ட, மண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில், "மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், முடி காணிக்கை செலுத்தும் மண்டபம், 10 குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.72 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்து, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பின், டெண்டர் விடப்படும்," என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...