கோவை சரவணா செல்வரத்தினம் வர்த்தக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை..!

வரி ஏய்ப்பு புகாரின் பேரில், சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை சரவணா செல்வரத்தினம் வர்த்தக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை, திருநெல்வேலிஉள்ளிட்ட நகரங்களிலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நகைக்கடை, துணிக்கடை, ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன.இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் செல்வ ரத்தினம் மற்றும் ராஜரத்தினத்திற்கு சொந்தமான சூப்பர் சரவணா ஸ்டோர், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் சரவணா செல்வரத்தினம் ஜவுளி கடையிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால்கடையில் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து, ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சுமார் 434 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...