விசாரணையில் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியை சேர்ந்த சூர்யா, விக்னேஷ் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சூர்யாவின் தாய் சரஸ்வதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 80 வயது மூதாட்டியிடம் ஐந்து பவுன் சங்கிலி பறித்த சம்பவத்தில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த லட்சுமி மில் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமியின் மனைவி தெய்வாத்தாள் (80). கணவரை இழந்த தெய்வாத்தாள் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
கடந்த 22ம் தேதி மதியம் தனது வீட்டருகே தனியாக நடந்து சென்று கொண்டிருந்த தெய்வாத்தாளை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் யாரும் இல்லாத இடத்தில் அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
தங்கசங்கிலியை பறிக்கும் பொழுது தவறி விழுந்த தெய்வாத்தாள் பலத்த காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரை பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த அவரது மகன் அய்யாச்சாமி இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், பல்லடம் டி.ஸ்.பி வெற்றிச்செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் விக்னேஷ் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, குற்றவாளிகள் சூர்யா, விக்னேஷ் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சூர்யாவின் தாய் சரஸ்வதி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சூர்யாவின் மீது பழனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.