பொள்ளாச்சியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோவில் கைது..!

அரசுப் பள்ளியில் நடைபெற்ற போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, மாணவி ஒருவர் அவரது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியதையடுத்து, தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வனத்துறை ஊழியர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழிப்பு நிகழ்ச்சியின்போது, மாணவி ஒருவர் அவரது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய விசாரணையின் போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வனத்துறை ஊழியராக பணியாற்றி வரும் சிறுமியின் தந்தை மீது ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வனத்துறை ஊழியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...