பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..!

பொள்ளாச்சி அருகே உள்ள கவி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை வனத்துறை அறிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கவி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை வனத்துறை அறிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அருவியில் கொட்டும் அதிகப்படியான வெள்ளத்தில் பாறைகள் மற்றும் மரக்கிளைகள் உருண்டு வரக்கூடும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால் பல பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியாறு அணையின் முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ளதால் அவ்வப்போது அணைக்கு வரும் நீர் வரத்திற்கு ஏற்றார் போல் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆழியாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் தொடர்ச்சியாக ஆழியாறு ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...