கோவையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது..!

சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சபரீஸ்வரன் (23). இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை அழைத்துச் சென்ற சபரீஸ்வரன் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்து சிறுமியைத் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த சபரீசன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...