கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்தார்.


கோவை: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிணத்துக்கடவு நகர இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

முன்னதாக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கு விழாவில் நகர இளைஞரணி அமைப்பாளர் அபு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

முன்னதாக கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உபகரணங்களும், பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆரோ வாட்டர் இயந்திரமும், பின்னர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சிகளில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்தார்.



மேலும் அண்ணாநகர் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கினவை கணேஷ், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், ஈஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலு, லட்சுமணன், பாலாஜி, முரளி, தினேஷ்குமார், கீதா கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...