பொங்கல் பரிசு பை… துணிப்பையில் 'இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்' அச்சிடப்பட்ட போட்டோ வெளியீடு..!

பொங்கல் பண்டிகையின் பொழுது நியாய விலை அட்டைதாரர்களுக்குக் கொடுக்க உள்ள 20-இலவச பொருள்கள் கொண்ட துணிப்பையில் "இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என அச்சிடப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது.


கோவை: பொங்கல் பண்டிகையின் பொழுது நியாய விலை அட்டைதாரர்களுக்குக் கொடுக்க உள்ள 20-இலவச பொருள்கள் கொண்ட துணிப்பையில் "இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என அச்சிடப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசு பொருட்களை ரேஷன் கடை மூலம் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவை வழங்கப்பட உள்ளது.

20-பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கு 1088-கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த தொகுப்புடன் கரும்பு வழங்குவதற்கு 71- கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த 20-இலவச பொருட்கள் கொண்டு துணிப்பையில் இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்ட போட்டோ வெளியாகி உள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...