'அரிசி ராஜா' வை விரட்ட கும்கி யானைகள் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் - கூடலூர் கோட்டாட்சியர்

பாடந்துறை பகுதியில் ஊருக்குள் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் "அரிசி ராஜா" என்ற காட்டு யானையை கும்கி யானைகள் கொண்டு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட கூடலூர் கோட்டாட்சியர் கூறினார்.


நீலகிரி: கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் ஊருக்குள் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையைக் கும்கி யானைகள் கொண்டு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட கூடலூர் கோட்டாட்சியர் கூறினார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக அரிசி ராஜா என்ற காட்டு யானை ஊருக்குள் நுழைந்து குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாடந்துறை கைம கொல்லி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பகுதியில் அடுத்தடுத்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானை வீடுகளை இடித்து சேதப்படுத்தி உணவுப் பொருட்களைச் சூறையாடிச் சென்றது.

இதனால் ஊருக்குள் அட்டகாசம் செய்து வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டுமென, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்து வந்தனர்.



இதனையடுத்து காட்டு யானை சேதப்படுத்திய வீடுகளை வனத்துறையினருடன் கூடலூர் கோட்டசியர் சரவண கண்ணன் மற்றும் கூடலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் அரிசி ராஜ என்ற காட்டு யானையைக் கும்கி யானைகளைக் கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள் என அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் கூறினர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...