ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடி: 3-பேருக்கு 10-ஆண்டுகள் சிறை தண்டனை- கோவை நீதிமன்றம் தீர்ப்பு..!

ஈரோடு மாவட்டம் பகுதியில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட 3-நபர்களுக்கு 10-ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.


கோவை: ஈரோடு மாவட்டம் பகுதியில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட 3-நபர்களுக்கு 10-ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் எனவும் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஹோட்டல் ரெசிடென்சி கட்டிடத்தில் இயங்கி வந்த ஜி 1 ஈழு பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைக் குருசாமி A1 முருகன், சுசிலா, லிங்குசாமி, ஆகியோர் பத்திரிகை மற்றும் ஊடகம் வாயிலாக விளம்பரம் செய்தனர்.

மேற்படி நிறுவனத்தில் உள்ள திட்டத்தை பற்றி முதலீட்டாளர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவ்வாறு மக்களை கவர்ந்து இழுத்து குற்றவாளிகள் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே பணத்தை திருப்பித் தராமல் 37-முதலீட்டாளர்களிடம் ஒரு கோடியே 2-லட்சத்து 7-ஆயிரத்து 500-பணத்தை ஏமாற்றி தலைமறைவாகி விட்டனர்.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட லிங்கம்பட்டி தெருவை சேர்ந்த லிங்கப்பா செட்டியார் மகன் குணசேகரன் என்பவர் 14.3.2012 -தேதி கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சௌந்தரராஜன் என்பவரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு கோவை கோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த டான் பிட் நீதிபதி ரவி இன்று A1கம்பெனி, A2குருசாமி 33, முருகன், ஆகியோருக்கு 10-ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மூவருக்கும் சேர்த்து 72-லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியுள்ளார்.

சசிகலா விடுதலை, லிங்குசாமி 30.4.2012 - ஆம் தேதி இறந்து விட்டார். அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் A2 குருசாமி ஆஜராகவில்லை. தலைமறைவாக உள்ளார் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...