சிறுவாணி அணை நீர்மட்டம் 44-அடியாக உயர்வு: மாநகராட்சி மூலம் 96.50-எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது

அணையிலிருந்து நாள்தோறும் 101.31 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகராட்சியின் தேவைக்காக மட்டும் 96.50 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44-அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வார்டுகளுக்கும், வழியோர கிரமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாகச் சிறுவாணி அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ள போதிலும், அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது.

இந்த அணை 50 அடி உயரம் கொண்டது. இருப்பினும் அணையின் பாதுகாப்பிற்காக 45 அடி உயரம் வரை மட்டுமே குடிநீரைத் தேக்கக் கேரள அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை நன்றாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனிடையே கடந்த மாதம் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 40-அடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது அணைக்கு அதிகளவு தண்ணீர் வருவதால் அணையின் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44-அடி என்ற அளவில் உள்ளது. தற்போது அணையிலிருந்து நாள்தோறும் 101.31 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகராட்சியின் தேவைக்காக மட்டும் 96.50 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...