கோவையில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானைகள்: பொதும‌க்க‌ள் அச்சம்..!

வனப்பகுதியை விட்டு வெளியேறிய சுமார் ஆறு யானை கூட்டமானது கணுவாய் சாலையில் உள்ள யமுனா நகரில் இரவில் மின் விளக்கு ஒளியில் உலா வந்தது. அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக பரவி வருகிறது.


கோவை: மின் விளக்கு ஒளியில் தெருவில் உலாவரும் யானைக்கூட்டம், வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாகக் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டு உள்ளது. குறிப்பாக மருதமலை அடிவாரம் பாரதியார் பல்கலைக்கழகம், ஓணாப்பாளையம் போன்ற மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள விலை நிலங்களில் இந்த காட்டு யானையானது இரவு நேரத்தில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வருவது உண்டு.

அவ்வாறு வாரும் யானைகள் விலை நிலங்களில் பயிர் செய்துள்ள கம்பு, தக்காளி, வாழை போன்ற பயிர்களை உண்டு சேதப்படுத்தி சென்று விடுகின்றன. மேலும் தற்போது பனிக்காலம் துவங்க உள்ள நிலையில், வனத்தை விட்டு வெளியேறும்‌ யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவது இப்பகுதியில் வாடிக்கையாகி விட்டது.



இவ்வாறு நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சுமார் ஆறு யானை கூட்டமானது கணுவாய் சாலையில் உள்ள யமுனா நகரில் இரவில் மின் விளக்கு ஒளியில் உலா வந்தது.



அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...