கிணத்துக்கடவு அருகே தனியார் கார் ஷோரூம் முன்பு நேற்று இரவு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி உயிரிழந்தார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் கார் ஷோரூம் முன்பு நேற்று இரவு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் அந்த நபர் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சொலவம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தில் உயிரிழந்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழப்புக்கு காரணமான கார் ஓட்டுநர் மதுரை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.