திருப்பூரில் முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு..!

குடிநீர் விநியோகத்தை முறைப்படி தரக் கோரியும் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகர் பகுதிகளில் மொத்தம் 60 வார்டுகளில் கொண்டதாக இருக்கின்றது. இதில் 42 மற்றும் 43 ஆகிய இரண்டு வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில், இந்த பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை என குற்றம்சாட்டி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

அந்த மனுவில், மழைக் காலங்களில்கூட இப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் இதனால் தண்ணீர் வரும் நாட்களில் வேலைக்குச் செல்வதை விட்டுவிட்டு தண்ணீர் பிடித்து வைக்கும் அவலம் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.



மேலும், குடிநீர் விநியோகத்தை முறைப்படி தரக் கோரியும் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...