கோவையில் ரயில் மோதி யானை உயிரிழந்த சம்பவம்: மாற்றுப் பாதையில் ரயில் வந்தது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்..!

சரக்கு ரயில் 'பி' லைனில் இயக்கப்பட்டதாலேயே மங்களூர் - சென்னை ரயில் 'ஏ' லைனில் இயக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் சரக்கு ரயில் 'பி' லைனில் இயக்கப்பட்டதாலேயே யானைகள் மீது மோதிய ரயில், 'ஏ' லைனில் இயக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோவை மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மாவுதம்பதி மலை கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, மூன்று யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன.

கேரளாவில் இருந்து கோவைக்கு 'பி' லைனில், வரவேண்டிய மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், 'ஏ' லைனில் வந்ததாலேயே விபத்து நடந்ததாக பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது.

இதை மறுத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம், 'சரக்கு ரயில் 'பி' லைனில் இயக்கப்பட்டதாலேயே மங்களூர் - சென்னை ரயில் 'ஏ' லைனில் இயக்கப்பட்டது' என, தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போத்தனுார் - பாலக்காடு இடையே உள்ள இரு ரயில் பாதைகளிலும், இரு மார்க்கத்திலும், ரயில்கள் இயக்கப்படும். போத்தனுார் பகுதி உயரமாக இருப்பதால், 'ஏ' லைனில் சரக்கு ரயில்களை இயக்குவது மிகவும் கடினம்.

இதையடுத்து ரயில்களின் தன்மை, அதில் உள்ள எடையின் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் ரயில் பாதைகளில் இயக்கப்படும். விபத்து நடந்த அன்று 'பி' லைனில் சரக்கு ரயில் இயக்கப்பட்டதால், 'ஏ' லைனில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, ரயில்வே நிர்வாகம் வனத்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...