கோவை ராம் நகரில் வீடு வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி - இருவர் கைது..!

வீடு வாங்கி தருவதாகக் கூறி முன்பணமாக 30 லட்சம் ரூபாய் பெற்று, திருப்பி தராமல் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ராம் நகரில் வீடு வாங்கி தருவதாகக் கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை கணபதியை சேர்ந்தவர் டென்ஸ்டன் (46). இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர்.

இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவை காட்டூரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (50), இவருக்கு சொந்தமான வீடு ஒன்று ராம் நகரில் உள்ளது. அந்த வீட்டை ரூ.95 லட்சத்திற்கு விற்பதாக என்னிடம் ஒப்பந்தம் செய்தார். அதற்கு முன் பணமாக ரூ.30 லட்சம் கொடுத்தேன். அப்போது அவரது நண்பர் கண்ணன் (40) உடன் இருந்தார். மீதி பணத்தை வீட்டை கிரையம் செய்யும் போது தருவதாக தெரிவித்தேன்.

இந்த நிலையில், சத்தியமூர்த்தி தனது வீட்டை கண்ணனுக்கு விற்பனை செய்து விட்டார். கண்ணன், அந்த வீட்டை தனியார் வங்கியில் வைத்து கடன் பெற்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவர்களிடம், எனது பணத்தை திருப்பி தர வேண்டும் அல்லது வீட்டை எனக்கு விற்பனை செய்யவேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் ரூ.30 லட்சத்தை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டனர். எனவே, அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மாநகர குற்றப்பிரிவு போலீசார் சத்தியமூர்த்தி, கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...