திருப்பூரில் மேலும் 3 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி..! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவுடன் டெங்கு அறிகுறி இருப்பவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேலும் 3 சிறுமிகள் டெங்கு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள், கழிவுநீர், மழைநீர் அதிக அளவில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவுடன் டெங்கு அறிகுறி இருப்பவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது காங்கேயம் பாளையம், பண்டிட் நகர், ஊத்துக்குளி சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, இந்த மூன்று பேரும் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...