கூடலூர் அருகே தொரப்பள்ளி ஆற்றில் குளிக்கச் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் பலி..!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.



நீலகிரி: கூடலூர் அருகே தொரப்பள்ளி ஆற்றில் குளிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள் மூவரில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள தொரப்பள்ளி பகுதியில் சுற்றுலாவிற்காக வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாக ஆற்றில் குளிக்க சென்று மூவரில் ஒருவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உடனிருந்தவர்கள் கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் ஆற்றில் இருந்து தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.

போலீசார் விசாரணையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலாவிற்காக வந்ததும் அப்போது தொரப்பள்ளி ஆற்றில் குளிக்கச் சென்ற பொழுது நீச்சல் தெரியாமல் 3 பேரில் வினோத் (45) ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். சுற்றுலாவிற்காக வந்த இடத்தில் குளிக்கச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...