மகரவிளக்கு சீசன்; சபரிமலையில் தற்காலிக தபால் நிலையம் துவக்கம்..!

ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் நிலையம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


கேரளா: மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலையில் தற்காலிக தபால் நிலையம் செயல்படத் துவங்கியுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் சீசன் நேரங்களில் தற்காலிக தபால் நிலையம் செயல்படும். நடப்பாண்டுக்கான சிறப்பு தபால் நிலையம் ஜனவரி 19 வரை செயல்பட உள்ளது.

கோவிலுக்கு நேரில் வர முடியாத பக்தர்கள் பிரார்த்தனை, வேண்டுதல் கடிதங்கள், திருமணம் போன்ற வீட்டு சுப நிகழ்ச்சி அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கலாம். கடிதங்களை சேகரித்து கோவிலுக்கு அனுப்பி வைக்கும் பணியை சிறப்பு தபால் நிலையம் மேற்கொள்கிறது.

அனைத்து தபால்களிலும் 18 படிகளுடன், அய்யப்பன் உருவத்துடன் கூடிய சிறப்பு முத்திரை அச்சிடப்படுவது, கூடுதல் சிறப்பு நிலைய அதிகாரி, இரண்டு தபால்காரர்கள், நான்கு பன்முக பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் நிலையம் செயல்படும்' என்று தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...