ரயிலின் வேகத்தை கண்டறிய இன்ஜினில் பொருத்தப்பட்டிருந்த 'சிப்' வனத்துறையால் கைப்பற்றப்பட்டது.
கோவை: கோவை ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தண்டனை குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் தெரியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மாவுதம்பதி மலை கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, மூன்று யானைகள் ரயில் மோதி இறந்தன. விபத்தை ஏற்படுத்திய கோழிக்கோட்டை சேர்ந்த இன்ஜின் டிரைவர் சுபயர் (54), உதவியாளர் அகில் (31) ஆகியோர் மீது தமிழக வனத்துறையினர் வன பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.
இருவரையும் கைது செய்யாமல், நிர்ப்பந்தத்தின் காரணமாகவே ரயில் டிரைவர், உதவியாளரை விடுவித்ததாக வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
எனவே, ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம் கூறுகையில், 'ரயிலின் வேகத்தை கண்டறிய இன்ஜினில் பொருத்தப்பட்டிருந்த 'சிப்' வனத்துறையால் கைப்பற்றப்பட்டது. நீதிமன்றத்துக்கு வழக்கு வரும்போது முக்கிய ஆவணமாக அது ஒப்படைக்கப்படும். நீதிமன்றம் தான் இருவருக்கும் தண்டனை வழங்க முடியும்,' என்று தெரிவித்தார்.