கோவையில் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில இளைஞர்கள் இருவர் கைது..!

பிடிபட்ட இருவரிடமும் வேறு ஏ.டி.எம் இயந்திரத்தில் திருடி உள்ளனரா? வேறு வழக்கில் தொடர்புடையவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திறக்க முயன்றதால் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது.

இதையடுத்து, அவர்கள் செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, உடனடியாக உதவி ஆய்வாளர் முத்துகுமார் தலைமையில் சென்ற போலீசார் ஏ.டி.எம் மையத்தில், லாக்கரை திறந்து திருட முயன்ற இருவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாகில் (18) மற்றும் காலீட் (28) என்பதும், கோவையில் உள்ள அமேசன் நிறுவன குடோனுக்கு லாரி மூலம் லோடு இறக்கிவிட்டு, திரும்ப சென்ற போது, செட்டிபாளையம் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணம் எடுத்துள்ளனர்.

இதையடுத்து, ஷாகில் வெளியே காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, காலீட் ஏற்கனவே போலியாக தயாரித்து வைத்திருந்த கள்ளச்சாவி மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை திறந்து, பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முயன்றதும் தெரியவந்தது.



இதனிடையே, பிடிபட்ட இருவரிடமும் வேறு ஏ.டி.எம் இயந்திரத்தில் திருடி உள்ளனரா? வேறு வழக்கில் தொடர்புடையவர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...