கோவையில் 4 இடங்களில் பாலம் கட்டும் பணி..! மிதமான மழைக்கே கடும் வாகன நெரிசல்..! மக்கள் அவதி.

கோவையில் தற்போது உக்கடம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் மற்றும் அவிநாசி சாலை என 4 இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.



கோவை: கோவையில் கடந்த சில நாட்களாகவே, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட போதும், காலை வேளைகளில் மழை பெய்யவில்லை. மாலைகளில் மட்டும் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை வரை கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் சாரல் மழை பெய்தது. காலை 8.30 மணியளவில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை துவங்கியதால், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவதியடைந்தனர்.

குறிப்பாக, காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால், செல்வபுரம், குனியமுத்தூர், கோவைப்புதூர், மதுக்கரை, சுந்தராபுரம், இராமநாதபுரம், சுங்கம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

மழையால், கோவையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவையில் தற்போது உக்கடம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் மற்றும் அவிநாசி சாலை என 4 இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சேதமடைந்த சாலைகளில் நிதானமாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, கவுண்டம்பாளையம் அருகே நடைபெற்று வரும் பால வேலையால், சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. சாலைகளில் உள்ள குழிகளில், ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.



Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...