கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் 3 பொம்மை துப்பாக்கிகள் சிக்கியது..!

விசாரணையில் கோவை சுந்தராபுரத்தில் ஒரு கடையில் ஏர்கன் விலைக்கு வாங்கியுள்ளார். இதேபோல், குனியமுத்தூரில் நடந்த வாகன சோதனைகளில் வந்த நபரிடம் 2 ஏர்கன்கள் இருப்பது தெரியவந்தது.



கோவை: கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் 3 பொம்மை துப்பாக்கிகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை காந்திபுரம் தங்கும் விடுதிகளில் காட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். 

இதனிடையே, காலிங்கராயன் வீதியில் உள்ள விடுதியில் சோதனையிட்டபோது, அங்கு தங்கியிருந்த கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (31), என்பவரிடம் ஏர்கன் மற்றும் பட்டன் கத்தி இருப்பது தெரியவந்தது. மேலும், அவருடன் கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த சக்திவேல் (30) என்பவரும் தங்கியிருந்தார். 

இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். இதில் சாகுல் ஹமீது கோவை மற்றும் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது. 



விசாரணையில் அவர்கள் கோவை சுந்தராபுரத்தில் ஒரு கடையில் ஏர்கன் விலைக்கு வாங்கியுள்ளார். இதேபோல், குனியமுத்தூரில் நடந்த வாகன சோதனைகளில் வந்த நபரிடம் 2 ஏர்கன்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே நாளில் இரு வேறு இடங்களில் ஏர்கன்கள் சிக்கியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...