எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பில் கோவைக்கு மிகப்பெரிய வாய்ப்பு..!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பில் கோவைக்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளதால், குறு- சிறு தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க தொழில் துறையினர் எதிர்பார்ப்பு.


கோவை: எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பில் கோவைக்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளதால், குறு- சிறு தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க தொழில் துறையினர் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

புவி வெப்ப மயமாதல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் வாகனங்கள் மூலம் காற்று மாசு ஏற்படுவது சமீப காலங்களில் மிகவும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் எதிர்வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை பல மடங்கு அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

ஏற்கனவே பல்வேறு தொழில்களில் உலகளவில் சிறந்து விளங்கும் கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படும் மோட்டார் தயாரிப்பதற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழக அரசு இதற்கு உதவ முன்வந்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தொழில்துறையினர், மோட்டார் உற்பத்தியில் குறு, சிறு தொழில் நிறுவனங்களும் அதிக பங்களிப்பு கொண்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(TANSPA) பொருளாளர் மற்றும் கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம்(COWMA) கிளஸ்டர் சர்வீசஸ், தலைவர், சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது:-

தொழில் நகரான கோவை டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப் செட், காஸ்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் மார்க்கெட்டில் அதிகம் விற்பனை செய்யப்பட உள்ளன.

தமிழக அரசு கோவையில் கிளஸ்டர் அமைக்க தேவையான உதவிகள் செய்ய முன்வந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. எலக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை சைக்கிள் முதல் கார், பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரை அனைத்து விதமான வாகனங்களும் தயாரிக்க முடியும்.

எனவே அனைத்து வகையான எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவைப்படும் மோட்டார் தயாரிப்பதற்கு கோவையில் உள்ள நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் இந்த திட்டத்தில் குறு சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் என அனைத்து தொழில் நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பொதுவாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மோட்டார் மிக முக்கிய கருவியாகும். சிறிய வாகனங்கள் முதல் பெரிய வாகனங்கள் வரை அனைத்து விதமான வாகனங்களுக்கும் தேவையான பல்வேறு விதமான திறன் கொண்ட மோட்டார்கள் தயாரிப்பதில் கோவையில் தற்போது மோட்டார் தயாரிக்கும் தொழிலில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் ஈடுபட வாய்ப்பு வழங்க வேண்டும்.

இதனால் வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிப்பு தொழிலில் தேசிய அளவில் கோவை மாவட்டம் முன்னோடியாகத் திகழ வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு சாஸ்தா எம் ராஜா தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...