கோவை விமான நிலையத்தில் ஒமைக்ரான் தொற்று பரிசோதனை...!

ஒமைக்ரான் தொற்று அதிவேகமாகப் பரவும் தன்மைகொண்டது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: ஒமைக்ரான் தொற்று அதிவேகமாகப் பரவும் தன்மைகொண்டது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் சில நாள்களுக்கு முன் ஒமைக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் பரவும் தன்மை வேகமாக உள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. இந்தப் பரிசோதனையானது சளி மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படுகிறது. கோயம்புத்தூர் விமான நிலையத்திலும் இந்தப் பரிசோதனையானது மேற்கொள்ளப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தப் புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவின் அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கோயம்புத்தூர் விமான நிலையத்திலும், முன்னெச்சரிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இந்த ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இப்பரிசோதனை செய்யப்படும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவு வரும்வரை அவர்கள் எங்கும் செல்லக்கூடாது என்றும், அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...