வடசித்தூர் மற்றும் செட்டிக்காபாளையம் பி.ஏ.பி கிளை வாய்க்காலிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதனால், 40 ஏக்கர் பரப்பளவிற்குத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கோதவாடி குளத்தை ஆய்வு செய்தார்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தை திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் உள்ள 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை, கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர் தூர்வாரி நீர் வழிப்பாதையை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் இந்த குளத்திற்கு வடசித்தூர் மற்றும் செட்டிக்காபாளையம் பி.ஏ.பி கிளை வாய்க்காலிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் 40 ஏக்கர் பரப்பளவிற்குத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் இன்று திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, கோதவாடி குளத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அங்கிருந்த விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கோதவாடி குளம் நிரம்புவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் மணிசுந்தர், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், கிணத்துக்கடவு தெற்கு ஒன்றிய செயலாளர் துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் கிரிகதிர்வேல், பொள்ளாச்சி நகர துணை செயலாளர் கார்த்திகேயன், பாலச்சந்திரன், நடராஜ், கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.