கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்.!

கடந்த 3- வாரங்களாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட 10-சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய 28-ஆயிரத்து 451-பேர் விண்ணப்பித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 28 ஆயிரத்து 457 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள 10-சட்டமன்றத் தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கத் திருத்தம் செய்யச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 3- வாரங்களாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கலந்துகொண்டு விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளனர். மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த முகாமை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வாக்கு வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் மேட்டுப்பாளையத்தில் 2960 பேரும், சூலூரில் 3,718 பேரும் கவுண்டம்பாளையத்தில் 3,644 பேரும், கோவை வடக்கில் 2,593 பேரும் தொண்டாமுத்தூரில் 3,737 பேரும் கோவை தெற்கு 2,175 பேரும் சிங்காநல்லூர் 2,072 பேரும் கிணத்துக்கடவில் 3,321 பேரும் பொள்ளாச்சியில் 1,759 பேரும் வால்பாறையில் 2,380 பேரும் எனப் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் மேற்கொள்வதற்காக 28 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...